Breaking News

கொரொனொ இல்லாமல் தனிமை படுத்தியதால் மனமுடைந்து ஒரே வீட்டில் நான்கு பேர் மரணம்...! ஆண்டிபட்டியில் நடந்த பரிதாபம்...

       தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி சுப்புலாபுரம் கிராமத்தில் மணிகண்டன்(55) ராமலட்சுமி(45) தம்பதியினர் வசந்த்(25) சசிகுமார்(19) என்ற இரு மகன்களோடு அமைதியாக வாழ்ந்து வந்தனர். மணிகண்டன் ஆண்டிபட்டியில் துணி கடை வைத்துள்ளார். 
    சசிகுமார், கடந்த மே மாதம் மகாராஷ்டிராவில் இருந்து தேனிக்கு வந்துள்ளார். தேனி மாவட்டம் சோதனை சாவடி முகாமில் அவருக்கு கொரொனொ பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரொனொ இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் மனமுடைந்த சசிகுமார், மே 17ஆம் தேதி தனிமை படுத்தப்பட்ட முகாமிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

       இதை தொடர்ந்து அவரது தாயார் ராமலட்சுமி, கடந்த மூன்று மாதங்களாக மகனை நினைத்து, மனமுடைந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார்.
       மகனையும் மனைவியும் இழந்த சோகத்தில் இருந்த மணிகண்டன், தனது மூத்த மகன் வசந்துடன் தனது துணிக்கடையில் தூக்கி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
       ஒரு குடும்பமே அழிந்துபோன பரிதாபத்தை கண்டு டி சுப்புலாபுரம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Post a Comment

0 Comments