Breaking News

கண்ணில் தூசி விழுந்து விட்டதா....! இனி கவலை வேண்டாம்..!

      கண்கள் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. மிகவும் மெல்லிய உறுப்பும் கூட.. ஆதலால் கண்களை மிகப் பாதுகாப்புடன் கவனிப்பது அவசியமாகும். கண்ணில் தூசி விழுந்தால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தூசிகளை எளிமையாக அப்புறப்படுத்தலாம்.
#கண்ணில் தூசி விழுந்தால் உடனே கசக்காமல், குளிர்ந்த நீரில் கண்களை விழிக்கச் செய்ய வேண்டும்.

#தூசி விழுந்ததும், கண்களை முன்புறமாக வைத்துக்கொண்டு, ஒருவரின் துணை கொண்டு கால்களைப் பின்னோக்கி நடக்க செய்தால், புற அழுத்தம் காரணமாக கண்களில் உள்ள தூசி தானாக வெளிவந்துவிடும்.

#தூசி விழுந்ததும் தூய்மையான பஞ்சினால் தூசியினை கவனமாக அப்புறப்படுத்தலாம்.

#தூசி விழுந்தால் ஒருவரை கண்களில் மெதுவாக ஊத சொல்லி தூசியினை அப்புறப்படுத்தலாம்.
#தூசி விழுந்த கண்ணில், ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டால் தூசி தானாக வெளியே வந்துவிடும்.

#விளக்கெண்ணைக்கு பதிலாக கண்ணாயில் பயன்படுத்தி தூசியை அப்புறப்படுத்தலாம்.

       மேற்கண்ட வழிமுறைகளில் தூசியை அப்புறப்படுத்த முடியாவிடில், கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். மேலும் வாகனத்தில் செல்லும் பொழுது கண்களில் தூசி விழாத வண்ணம்,ஹெல்மெட் , கூலிங்கிளாஸ் பயன்படுத்தி கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


Post a Comment

0 Comments