Breaking News

வியர்வை நாற்றத்தால் ஒதுங்கி நிற்கிறீர்களா..? இனி கவலை வேண்டாம்; வியர்வை நாற்றத்தை நீக்கும் அற்புதமான வழிமுறைகள்

       நமது உடலிலிருந்து இயற்கையாகவே வியர்வை வெளி வந்து கொண்டே இருக்கும். உடலில் உள்ள கழிவினை தோலில் உள்ள சிறு துவாரங்கள் மூலமாக உடல் செல்கள் வியர்வை நீரை வெளியேற்றுகின்றன. உண்மையாக சொல்லப்போனால் வியர்வை எந்த விதத்திலும் நாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் வியர்வை உடலில் உள்ள நச்சு பொருட்களோடு இணைந்து ஒருவிதமான மாற்றத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இந்தப் பிரச்சினையால் சில பேர் ஒரு கூட்டத்தில் இருந்து தன்னை ஒதுக்கி கொள்கின்றனர். 

      வியர்வை நாற்றத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய பாடி ஸ்பிர , ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயனளிக்கின்றன சில நேரங்களில் வியர்வை துளியுடன் பாடி ஸ்ப்ரே யும் கலந்து புதுவிதமான நாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றதுஇனிமேல் இந்த வியர்வை நாற்றத்திற்கு குட்பை சொல்லும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றி உங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளுங்கள்

#குளிக்கும் நீரில் எலுமிச்சம் பழம் சாறு கலந்து சிறிதளவு உப்பு போட்டு கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்

#குளிக்கும்பொழுது படிகாரத்தை தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்

#தினமும் தக்காளி ஜூஸ் பருகி வந்தால்உடல் சூடு குறைந்து வியர்வை வருவதுகுறைந்துவிடும் 

#வெந்நீரில் சிறிதளவு ரோஸ்மேரி இலைகளை போட்டு குடித்து வந்தால் ரோஸ்மேரி இலைகளில் உள்ள மெந்தால் மற்றும் குளோரோஃபில் உடலில் உள்ள வியர்வை நாற்றத்தை நீக்கி உடலுக்கு உடலில் நறுமணத்தை வீசச் செய்யும்

Post a Comment

0 Comments