Breaking News

மீரா மிதுனின் விமர்சனங்களுக்கு சூர்யாவின் பதிலடி..!

மீரா மிதுனின் விமர்சனங்களுக்கு சூர்யாவின் பதிலடி.....

             

         கடந்த சில நாட்களாக நடிகை மீரா மிதுன், சமூக வலைதளங்களில் விஜய் , சூர்யா, திரிஷா, மணிரத்தினம் உள்ளிட்ட பல பிரபலங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சிகரம் பாரதிராஜா , பல்வேறு நல உதவிகளை சமூகத்திற்கு செய்து, கௌரவமாக வாழும் கலைஞர்களை கொச்சைப் படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நடிகை மீரா மிதுனின் விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

       இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது டுவிட்டரில்,  எனது தம்பி தங்கையரியின் நேரம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்றும்; தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து நமது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்றும்;  இயக்குனர் சிகரம் பாரதிராஜாவுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என்றும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments