Breaking News

கொரொனொவை வென்ற நாடுகள்...!

           கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது கொரொனொ தொற்று. கொரொனொ தொற்றுவினால் இதுவரை 2 கோடி பேர் உலகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 லட்சம் வரை மக்கள் உயிரிழந்துள்ளனர்.

      ஆரம்பத்தில் அனைத்து நாடுகளும் அலட்சியம் காட்டி வந்த நிலையில், சீனாவிலிருந்து கொரொனொ தொற்று இத்தாலியை மிரட்டிய பொழுது சற்று விழித்துக் கொண்டனர்.

      அந்த வகையில் கொரொனொ தொற்றுவினை கட்டுப்படுத்தவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வந்தது. ஆனால் அதில் ஒரு சில நாடுகளே வெற்றி கண்டன. பிரிட்டனின் மைக்கேல் பார்பர், மலேசியாவின் இட்ரிஸ் ஜலா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் உலக நாடுகள் கொரொனொ தொற்றுகாக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளையும், அதில் எந்த நாடுகள் வெற்றி கொண்டன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

     அதில் நியூசிலாந்து, டென்மார்க், உகாண்டா, தென் கொரியா போன்ற நாடுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கள் மக்களை கொரொனொ தொற்றுவிலிருந்து காப்பாற்றிக் கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

     இப்படி பல நாடுகள் கொரொனொ தொற்றுவினை கட்டுப்படுத்தவதில் வெற்றி கண்டிருந்தாலும் உலக நாடுகளிடையே சரியான ஒத்துழைப்பு இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.




Post a Comment

0 Comments