Breaking News

ஸ்டெர்லைட் ஆலை பற்றிய வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

        2018 இல்தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் நடத்தும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுக்கள் வெளியேறி காற்று மாசுபடுவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரமடைந்து காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
      இதனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் ஆலையை திறக்க கோரி மனு அளித்திருந்தது.

         இன்று விசாரணையின் முடிவில் ஆலையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக அரசு செய்தது சரியே..! என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
மேலும் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments