Breaking News

மீண்டும் பிரதமராகிறார் ராஜபக்சே...! பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி..

        இலங்கையில் கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 225 தொகுதிகளில் 7, 552 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
      இந்த தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 7 மணிக்கு 66 மையங்களில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மகிந்த ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது.

கூட்டணி அரசு

   இலங்கை அரசியலைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்குகளை பெரும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தற்பொழுது ராஜபக்சே கட்சிக்கு 145 எம்பிக்கள் தான் இருக்கின்றனர். ஆதலால் டக்ளஸ் தேவானந்தா கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் இணைந்து மீதமுள்ள ஐந்து இடங்களைப் பெற்று மகிந்த ராஜபக்சே ஆட்சி அமைக்க இருக்கிறார்.

Post a Comment

0 Comments