Breaking News

தீவிர சிகிச்சைப் பிரிவில் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்...! பிரார்த்தனையில் பிரபலங்கள்.....!

            இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரொனொ தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அடுத்த நாளே எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக்கில், தனக்கு ஏற்பட்டிருப்பது சிறிய தொற்றுதான் எனவும் தற்போது உடல் நலம் சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவேன் எனவும் பதிவிட்டு, ரசிகர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருந்தார்.
     அதன் பின்னர் கடந்த 13-ம் தேதி திடீரென்று உடல்நிலை மோசம் ஆகிப்போனது. உடனே அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

       இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை எனவும் , இன்னும் செயற்கை சுவாசத்தில் தான் இருக்கிறார் எனவும், மருத்துவர்கள் நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் இருக்கிறார்கள் என்றும், நாங்களும் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் எனவும் பேட்டி அளித்திருந்தார்.
       இந்நிலையில் இசைஞானி இளையராஜா "பாலு சீக்கிரம் வா...! நான் காத்திருக்கிறேன்.. மீண்டும் இசையோடு
நம் பந்தம் தொடரட்டும்.." என்று உருக்கமாகப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்

      மேலும் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் தனுஷ், அனிருத், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் எஸ்.பி.பிகாக எங்களோடு இணைந்து நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்..! என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments