Breaking News

எஸ்.பி.பியின் தற்போதைய உடல்நிலை பற்றி எஸ்.பி.பி சரண் விளக்கம்..!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரொனொ தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எஸ்.பி.பி-யின் தற்போதைய உடல்நிலை பற்றி எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி சரண் நேற்று மாலை ட்வீட்டரில் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தனது தந்தை 90% மயக்க நிலையிலிருந்து திரும்பி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்திருந்தார். மேலும் எஸ்.பி.பி உடல்நிலைக்காக பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், தொடர்ந்து தந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.




Post a Comment

0 Comments