Breaking News

பொது மக்களை சுட்டுக் கொன்றதற்கும் நீதி கிடைத்திட வேண்டும்...! சீமான் வலியுறுத்தல்.

      வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசு, ஆலைக்கு சீல் வைத்தது தவறு என கோரியும்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் இன்று, உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது என்றும், தமிழக அரசின் முடிவு சரியே; என்றும் தீர்ப்பளித்தது.
       இந்த தீர்ப்பையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுக்கப்பட்ட தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்றும்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அறவழியில் போராடிய பொதுமக்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினர் மீதும், இச்சம்பவத்திற்கு பின்புலமாய் இருந்த அரசின் மீதும் நடவடிக்கை எடுப்பதே சரியான நீதியாகும்" என்று கூறினார்.

Post a Comment

0 Comments