Breaking News

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..

          தமிழகத்தில் கொரொனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறுத்தப்பட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

       இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளி திறக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. 

        இதுகுறித்து தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தனது சுட்டுரையில், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் சென்னையில் கொரொனா தொற்று குறைந்தபட்சம் இருந்தாலும்கூட மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் முழுமையாக தொற்று குறைந்த பின்னர் பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments