Breaking News

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரொனாவுக்கு பலி...!

          கடந்த மாதம் சாத்தான்குளத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜூலை 24 ஆம் தேதி அன்று கொரொனாவினால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலையில் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

         கடந்த சனிக்கிழமை அன்று அவரது மனைவி மங்கையர் திலகம் தனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


      இதுகுறித்து பால்துரையின் மனைவி "என் கணவருக்கும் அந்த கொலைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. என் கணவரின் உயிரிழப்பிற்கு காரணம் சாத்தான்குளம் காவல் நிலைய எழுத்தர் பியூலா சேவியர் ஆகியோர்தான்" என கூறினார்

Post a Comment

0 Comments