Breaking News

முதலமைச்சர் மற்றும் தேசியக்கொடிக்கு களங்கம் விளைவித்ததாக நடிகர் எஸ்.வி. சேகர் மீது புகார்....!

   பா.ஜ.க நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி சேகர் சமீபத்தில் வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

       இதுபற்றி முதல்வர் பேசும்பொழுது எஸ்.வி.சேகர் வழக்கு என்று வந்துவிட்டால் ஓடி ஒளிந்து கொள்வார். அவரெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, அந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்.வி.சேகர், தாங்கள் பால் பாக்கெட்டுகள் எனவும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் எம்ஜிஆர் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் நடந்தது.

      இதைத்தொடர்ந்து முதலமைச்சர், எம்.ஜி.ஆர் சிலை மீது களங்கத்தை ஏற்படுத்தியவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து எஸ்.வி சேகர் காவியை முதலமைச்சர் களங்கம் என்று கூறியது தவறு எனவும் அப்படி என்றால் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய கொடி ஏற்றும் பொழுது தேசிய கொடியில் உள்ள காவியை நீக்கிவிட்டு ஏற்ற போகிறாரா..? என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

       இதைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் சார்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் நிலையத்தில், முதலமைச்சர் மற்றும் தேசியக்கொடியை பற்றி பேசி களங்கத்தை ஏற்படுத்தும் எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

Post a Comment

0 Comments