Breaking News

45 ஆண்டுகள் நிறைவுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்…!

      தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவிற்கு வந்து இன்றோடு 45 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு சினிமா பிரபலங்களும், அவரது ரசிகர்களும், சொந்தங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

        இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில், சினிமாவில் 45 ஆண்டுகள் நிறைவுபெற்ற இந்நாளில் என்னை வாழ்த்திய ரசிகர்களுக்கும் சொந்தங்களுக்கும் நன்றி என்றும் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று கூறி நன்றிகளை தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து 45 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.


Post a Comment

0 Comments