Breaking News

ரஜினி : கமல்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி - ரசிகர்கள் வரவேற்பு...!

         சில மாதங்களுக்கு முன்பு வெளியான "கைதி" படம் தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. உதவி இயக்குனராக பணியாற்றாமல், இயக்குனராக பணியாற்றிய தனது இரண்டாவது படத்திலேயே தனக்கென்று தனி பாணி அமைத்து அசத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
        தற்போது லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாரான "மாஸ்டர்" என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாகவும், அந்த படத்தினை நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
        இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது டைரக்டர் சிவா இயக்கத்தில் "அண்ணாத்த" என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதை தொடர்ந்து, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments