Breaking News

தலைப்பிரசவமா...? கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

        கர்ப்பிணி பெண்கள் பொதுவாக தனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியோடும் அதே நேரத்தில் இனம்புரியாத குழப்பத்தோடும் பயத்தோடும் இருப்பார்கள்..
   
       அதுவும் தலைப் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம் வயதில் அதிர்ந்து போய் இருப்பார்கள் ஏனென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் ஒவ்வாமை வாந்தி உள்ளிட்ட பல பிரச்சினைகளால் துவண்டு போய் இருப்பார்கள்.

     தலைப்பிரசவ கர்ப்பிணிகள் கீழ்காணும் சில வழிமுறைகளை பின்பற்றினால் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து ஆரோக்கியமான பிரசவத்திற்கு தயாராகலாம்.

ஓய்வு

        கருத்தரித்த பின்னர் தலைப்பிரசவம் மேற்கொள்ளும் தாய்மார்கள் உடலில் பிடிக்கும் கடினமான வேலைகளை தவிர்ப்பது நல்லது. அதிகமான பணிச்சுமையை சற்று ஒதுக்கி வைத்து விட்டு தேவையான நேரங்களில் குட்டித்தூக்கம், பாடல் கேட்பது, புத்தகங்களைப் படிப்பது என்று ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஓய்விற்காக ஒதுக்குங்கள். இது உங்கள் உடல் மற்றும் மன நிலைக்கு இதமானதாக இருக்கும்.

நடைபயிற்சி

      டாக்டர்கள் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களை சுக பிரசவத்திற்காக நடைபயிற்சி மேற்கொள்ள சொல்வார்கள். சிறிய சிறிய உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி யோகா தியானம் போன்றவை உடலுக்கு அலுப்பினை
 நீக்கி உற்சாகத்தை ஏற்படுத்தும்.

கவலைகளை ஒதுக்குங்கள்

       எந்த நேரமும் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நினைத்து கவலைக் கொண்டு இருக்கக் கூடாது; இது வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து.

        சில தாய்மார்கள் நமக்கு தலை பிரசவம் எப்படி ஏற்படும் என்று அச்சம் கொண்டு கவலையில் இருப்பார்கள். அந்த கவலைகளை பக்தியின் மூலமாக இறைவனை தியானித்து கொண்டு அந்தக் கவலையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

நீர்ச்சத்து அவசியம்

     இன்றைய தாய்மார்கள் பல பேர்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தும் முதல் விஷயம் அதிகமாக நீர் ஆகாரங்கள் பருகுங்கள் என்பதேயாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு போதுமான நீர் சத்து கிடைக்காமல் போகும் பட்சத்தில் பிரசவத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் நீர்,ஜூஸ் வகைகள் போன்ற நீர் ஆகாரங்களை உட்கொண்டு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.

உணவு முறைகள்

      உடலில் களைப்பு தெரியாமல் இருக்க போதுமான அளவு சத்துக்கள் இருத்தல் அவசியம் ஆதலால் தாய்மார்கள் சத்தான ஆகாரத்தையும் உண்ண வேண்டியது அவசியம். ஆரோக்கியமான அசைவ உணவுகள் பழங்கள் கீரை வகைகள் ஆகியவற்றை தவறாது உட்கொள்ள வேண்டும் மூன்று வேளைகளில் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளாமல் ஐந்து அல்லது ஆறு வேளையாக சிறிது சிறிதாக உணவினை எடுத்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments