Breaking News

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது..!

       இந்தியாவில் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
      மொத்தமாக 45 ஆசிரியர்கள், இந்தியா முழுவதும் தேர்வாகியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் திலீப் மற்றும் ஆசிரியை சரஸ்வதி ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.

          ஆசிரியர் திலீப் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆசிரியை சரஸ்வதி சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
      வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதியில் டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருதினை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கயிருக்கிறார்.

Post a Comment

0 Comments