Breaking News

கொரொனொவினால் மகன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத தம்பதியினர் அடுத்தடுத்து மரணம். நாகர்கோவிலில் பரிதாபம்.

       நாகர்கோவிலில் மகன் கொரொனொவினால் பாதிக்கப்பட்டு இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் தம்பதியினர் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
       நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் ஆல்பர்ட்(88), செல்லம்மாள்(81) என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஆல்பர்ட் மாநில முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றியவர் .மேரி செல்லம்மாள் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார். இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

        ஒரு மகன் நாகர்கோவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரொனொ நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இச்செய்தியைக் கேட்ட தம்பதியினர் பெரும் சோகத்தில் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஆல்பர்ட் உயிரிழந்தார்.
       அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முயன்ற போது செல்லம்மாள் திடீரென்று மூர்ச்சை அடைந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து தம்பதியினர் இருவரையும் ஒரே கல்லறையில் அடக்கம் செய்தனர்.


Post a Comment

0 Comments