Breaking News

புதிய தேசிய கல்வி கொள்கை 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான அடித்தளம் ..! மோடி புகழாரம்

       தேசிய கல்விக் கொள்கை குறித்த "உயர்கல்வியில் மாறும் சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் சிறப்புரையாற்றினார்
        அந்த உரையில், முந்தைய தேசிய கல்வி கொள்கை எதை யோசிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியது. ஆனால் தற்போது உள்ள தேசிய கல்வி கொள்கை எப்படி யோசிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.  இந்த இரண்டிற்கும் அதிக வித்தியாசம் உண்டு.

     புதிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பான்மையாக இந்த தேசிய கல்வி கொள்கை அனைவராலும் வரவேற்கும் படியாக இருக்கிறது. இந்த கல்விக் கொள்கை ஒரே சார்புடையது என்று யாரும் சொல்லவில்லை. இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது.
      தற்பொழுது இந்த கல்விக் கொள்கையை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து அனைவரின் கவனமும் இருந்து வருகின்றது. தாய்மொழியில் கற்றுக்கொடுப்பது மாணவர்களுக்கு ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி, புதிய கல்விக் கொள்கையில் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கையானது இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இந்தியாவுக்கான மிகப்பெரும் அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகளாவிய வாய்ப்புகளை இது எளிதாக கண்டறிய உதவும்.

    ஒரு நபர் ஒரே தொழிலில் வாழ்க்கை முழுவதும் இருந்திட முடியாது என்கின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருவதால் ஒவ்வொருவரும் அனைத்து துறைகளிலும் வல்லுனர்களாக மாறவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதை மனதில் வைத்துதான் தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் தெரிவித்தது போல கல்வியின் நோக்கம் என்பது "நல்ல மனிதர்களை உருவாக்குவது அவர்களுக்கு திறமையை கொடுப்பது" அவர் சொன்னதைப் போன்று ஆசிரியர்களுக்கு தொழிலறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் பங்கு தேசிய கல்விக் கொள்கைக்கு உண்டு என்று மோடி அவர்கள் உரையாற்றினார்.

Post a Comment

0 Comments