Breaking News

நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

        கொரொனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் மத்திய அரசால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் நீட் தேர்வு செப்டம்பர் 10-ஆம் தேதியும் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பல மாணவர்கள் தேர்வுகளை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
       இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க ஸ்டாலின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.

        அக்கடிதத்தில், இந்தியா முழுவதும் பொது முடக்கம் காரணமாக பேருந்துகள் இயங்காத நிலையில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு மையத்தினை அடைவது சாத்தியமில்லை என்றும், பல மாநிலங்களில் வெள்ளத்தினால் பெரும் துயரத்தில் இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது சிரமம் எனவும், ஆதலால் நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments