Breaking News

தந்தை இறந்ததை அறிந்தும் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளர் மகேஸ்வரி...!

         74வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் கொடியேற்றினார். அவரை கௌரவிக்கும் விதமாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
        இந்த அணிவகுப்பு மரியாதையை முன்னின்று நடத்தும் பொறுப்பினை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி இடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த செய்தியை கேட்ட மகேஸ்வரி யாரிடமும் சொல்லாமல் தனது கடமையை முடித்து விட்டு இறுதி சடங்கில் பங்கேற்கலாம் என்ற முடிவை எடுத்துக் கொண்டு இன்றைய அணிவகுப்பினை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தார்.
     அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு தந்தையின் இறுதிச் சடங்கிற்காக புறப்பட்ட பொழுது மற்றவர்களிடம் தெரிவித்தார். அவரது கடமை தவறாத செயலினை கண்டு மற்றவர்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.

மகேஸ்வரியின் இந்த தியாக உணர்வை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Post a Comment

0 Comments