Breaking News

வைரலாகும் விஜய் போட்டோ....! நடிகர் மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட நடிகர் விஜய்....

நடிகர் விஜய், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட புகைப்படங்கள், நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

தற்பொழுது சில நாட்களாக "கிரீன் இந்தியா" சவால் பரவலாகி வருகின்றது. அதாவது ஒரு பிரபலம் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு மற்ற பிரபலங்கள் மூன்று பேருக்கு இந்த சவாலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்கள்.


சில நாட்களுக்கு முன்பாக தனது பிறந்தநாளை கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, தன் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன் ஆகிய மூவருக்கும் சவால் விட்டிருந்தார். 


இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.


Post a Comment

0 Comments