Breaking News

மகாராஷ்டிராவில் 5 மாடி அடுக்கு குடியிருப்பு சரிந்து விழுந்து 12 பேர் பலி..!

      மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டம் மஹத் நகரில் பருக் காஸி என்பவர் ஐந்து வருடங்களுக்கு முன்பாக 5 மாடி குடியிருப்பு ஒன்றினை இன்ஜினியர் துணையுடன் கட்டியிருக்கிறார். இக்கட்டிடத்தில் வாடகைக்காக 45 குடியிருப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
       இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலையில், 5 மாடி குடியிருப்பு திடீரென்று சரிந்து விழுந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். தகவலின்பேரில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மூன்று குழுவினரும், தீயணைப்பு படையைச் சேர்ந்த 12 குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
       நவீன இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புப் பணிகள் இரவு முழுவதும் இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று நான்கு வயது சிறுவன், 60 வயது மூதாட்டி ஆகிய 
இருவரை மீட்புக்குழுவினர் உயிரோடு மீட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

      இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் ஓனர் பருக் காஸி, இன்ஜினியர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். >


Post a Comment

0 Comments