Breaking News

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுப்பகுதியில் பரவிவரும் காட்டுத் தீ..! 10,500 ஏக்கர் காட்டுப்பகுதி அழிந்து நாசம்..

     அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க கிட்டத்தட்ட 1,000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
      ஏற்கனவே 10,500 ஏக்கர் காட்டுப்பகுதி அழிந்து நாசமாகி உள்ளது. இந்நிலையில் தீயின் வேகம் அதிகரித்து வருவதால் இன்னும் அதிக பாதிப்பினை கொடுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
       காட்டு தீயை அணைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தீயை அணைக்க போராடி வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments