Breaking News

தமிழக அரசின் இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை குறித்து தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் வேதனை

நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 68 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை நிலைப்பாடே இருப்பதால் மும்மொழிக் கொள்கைக்கு எந்த விதத்திலும் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காது என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். இதுபற்றி தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்.

புதிய கல்விக் கொள்கை மூலம் நமது கல்வி முறை உலகத்தரத்திற்கு மேம்பட இருக்கிறது தாய்மொழி கல்வி கட்டாயம் என்பது அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதேசமயத்தில் புதிய கல்விக் கொள்கை தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் உரியது. அதில் எந்த இடத்திலும் இந்தியா சமஸ்கிருதம் கட்டாயம் என்று குறிப்பிடவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பினை அரசு பள்ளி மாணவர்களை இழந்துவருகின்றனர்.

மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர் அதனை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். 1968ம் ஆயிரத்து 20 ம் மக்களின் வாழ்வாதாரம் மாறவில்லையா? கருத்துக்கள் மாறவில்லையா?

தமிழக மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்கும் பொழுது வேற்று மாநிலத்தவரும் தமிழ் மொழியை கற்க முன் வருவார்கள் அல்லவா; நமது பாரத பிரதமர் செல்லும் இடங்களிலெல்லாம் தமிழ்மொழியின் சிறப்பினை எடுத்துரைக்கிறார். இந்திய மாணவர்களின் எதிர்கால நலனை மொழியினை காரணம்காட்டி தடுத்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments