Breaking News

எலி மருந்து கொடுத்து குடும்பத்தை போட்டுத்தள்ள முடிவெடுத்த இளைஞர்…! கேரளாவில் பரிதாபம்...

கேரளாவில் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் பென்னி. இவருக்கு பெஸ்ஸி என்ற மனைவியும் ஆல்பின் என்ற மகனும் ஆன் மேரி என்ற மகளும் இருந்தனர்.

  இதில் ஆன் மேரியும் பென்னியும் உடல்நலம் சரியில்லாமல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஆகஸ்ட்  6 ஆம் தேதி ஆன் மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரது பிரேத பரிசோதனையில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாக கூறப்பட்டது.

தீவிர சிகிச்சையில் இருந்த வரும் பென்னியின் உடலை பரிசோதித்தபோது அவரது கல்லீரல் மிகவும் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆல்பின் மீது சந்தேகப்பட்டு அவனை விசாரித்தனர். விசாரணையில் ஜூலை 30 ஆம் தேதி ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டான்.

மேலும் அவன் தனிமையில் வாழ விரும்புவதாகவும் தன் குடும்பத்தினரை காலி செய்துவிட்டால் எந்த தொந்தரவும் இருக்காது  என நினைத்து கொல்லமுயன்றதாகவும் ஒப்புக்கொண்டான். ஆல்வின் அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments