Breaking News

கட்டுப்பாடுகளால் பரிதவிக்கும் ஐபிஎல் அணிகள்..! வீரர்களை தங்க வைப்பதில் நீடிக்கும் குழப்பம்..

       ஐபிஎல் பதிமூன்றாவது சீசன் இந்த ஆண்டு மார்ச் 29 இல் துவங்க இருந்தது ஆனால் கொரொனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது
      வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் பத்தாம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஐபிஎல் அணி வீரர்கள் அனைவரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி துபாய்க்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது ஆனால் வீரர்களை தங்கவைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
     
       துபாயில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் முதலில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் ஏசி ரூம்களில் கொரொனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் ரெசார்ட்களில் தங்க வைக்கலாமா?என்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. 

         மேலும் வீரர்கள் தங்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்வதற்கு பிசிசிஐ பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் வீரர்களை தங்க வைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

Post a Comment

0 Comments