Breaking News

டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள் பள்ளி திறக்க வாய்ப்பில்லையாம்….

   தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரொனொ தொற்று காரணமாக கல்லூரிகள் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றிருந்த நிலையில் கொரொனொ காரணமாக இன்னும் திறக்கப்படாமல் இழுபறியில் இருந்துகொண்டே இருக்கின்றது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்..? என்ற கேள்வி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றது. இதுகுறித்து அதிகமான கொரொனொ பரவல் காரணமாக அரசும் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றது.

இதைத்தொடர்ந்து மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்றக் குழு கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை செயலர் அமித் காரே, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகின்றது எனவும், அதே நேரத்தில் பள்ளி கல்லூரிகள் தொடங்குவது பற்றிய முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், கொரொனொ பரவல் அதிகரித்து வருவதால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனவும் அதற்காக zero acadamic year அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தார்.


மேலும் அவர் கூறுகையில், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுள்ள நிலையில் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், இருந்தாலும் இன்னும் 15 நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.


Post a Comment

0 Comments