Breaking News

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் கனமழை..! சட்டிஸ்கர், ஒரிசாவிற்கு ரெட் அலர்ட்..

       இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
      வங்கக் கடலில், வடக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, ஓரிரு நாட்களில் வடகிழக்கு திசையில் நகர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக ஒரிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தீவிரமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகபட்ச மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இரண்டு மாநிலங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
       தமிழகத்தில் நாளை சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments