Breaking News

மழைக்காலத்தில் வீட்டுக்குள் பாம்பு நுழையாமல் தடுக்க என்ன செய்யலாம்..?

        "பாம்பை கண்டால் படையும் நடுங்கும்" என்பது பழமொழி. இந்த பாம்பினால் உலகமெங்கும் வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பலியாகியும்  வருகின்றனர்;  என்பதே நடுங்கவைக்கும் ஒரு உண்மை செய்தியாகும். 
    பெரும்பாலும் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களிலும், ஊருக்கு ஒதுக்குப் புறம் அமைந்துள்ள வீடுகளிலும் வசிப்பவர்களை அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

     மழைக்காலம் நெருங்குகின்ற இந்த நேரத்தில் விடுமுறையும் நீட்டிக்கப்பட் டு வருகின்றது, இந்த நேரத்தில் வீட்டின் முன் பகுதிகளிலோ பிற பகுதிகளிலோ விளையாடும் நம் குழந்தைகளை பாம்பு போன்ற கொடிய பிராணிகளிடமிருந்து பாதுகாப்பது  அவசியமான ஒன்றாகும்.

 அந்தவகையில் பாம்புகள் நம் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க சில டிப்ஸ்களை பார்ப்போம்.

# வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய புதர் பகுதிகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில் பாம்புகள் பெரும்பாலும் புதர் பகுதியை விரும்பி, அதில் வாழும் தன்மையுடையது. அதனால் வீட்டை சுற்றி இருக்கக் கூடிய புற்கள், படரும் செடிகளை அப்புறப் படுத்துவது நல்லது

#வீட்டை சுற்றிலும் பாம்புகள் வராத வண்ணம் சிறப்பம்சங்களுடன் தடுப்பு திரை தற்பொழுது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அதனை நம் வீட்டிற்கு அவசியம் என்றால் அதனை பயன்படுத்திக் கொண்டு பாம்புகள் வீட்டுக்குள் நுழையாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

#வீட்டை சுற்றிலும் மரத்துண்டுகள், ஓலைகள், பயன்படுத்தப்படாத பொருள்கள் ஆகியவை இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் . ஏனென்றால் பாம்புகள் பதுங்கியிருந்து இரைகளை பிடிக்கும் வழக்கம் உடையவை. ஆதலால் அந்த பொருள்களை பாம்புகள் பயன்படுத்தாத வண்ணம் அதனை அப்புறப்படுத்துவது நல்லது.

#வீட்டை சுற்றிலும் துளைகள் ஏதாவது இருந்தால் துளையினை உடனடியாக முழுமையாக அடைக்கவேண்டும்.

#வீட்டை சுற்றிலும் இரவு நேரத்தில் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் பாம்புகளிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

#பாம்புகளுக்கு தவளைகள், எலிகள், பூச்சிகள் போன்றவை பிடித்த இரைகள் ஆகும். ஆதலால் இந்த இரைகளை பாம்புகளுக்கு கிடைக்காதவாறு  எலிகள், தவளைகள், பூச்சிகள் வீட்டை சுற்றி திரியாத வண்ணம் அதனை ஏதாவது ஒரு வகையில் அழித்து விடுவது நல்லது.

#மேலும் காட்டு பகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினர் கட்டாயமாக வனத்துறையினர் தொலைபேசி எண்களை வைத்திருப்பது உதவிகரமாக இருக்கும்.

Post a Comment

0 Comments