Breaking News

சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி தெரியுமா...?

           குழந்தைகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்களில் பொரி உருண்டையும் ஒன்று. கார்த்திகை திருநாள் உள்ளிட்ட இந்து பண்டிகைகளில் பொரி உருண்டை, கடவுளுக்கு படைக்கப்பட்டு வருகிறது, இந்த பொரி உருண்டை ,வாதம் ,கபம், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்க வல்லது.
இனி உங்கள் வீட்டிலேயே பொரி உருண்டை செய்து அசத்துங்கள்......

தேவையான பொருட்கள்

#பொரி

#சர்க்கரை(பொரியின் சம அளவு)

#ஏலக்காய் பொடி

#வறுத்த வேர்க்கடலை (நொறுக்கி வைத்துக்கொள்ளவும்)

செய்முறை
       ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பொரியினை எடுத்துக்கொண்டு அதில் ஏலக்காய் பொடி, நொறுக்கிய வேர்க்கடலையை கலந்து அதனுடன் சர்க்கரை பாகுவினை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து உருண்டை பிடித்துக் கொள்ளவும். கொஞ்சமாக காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துக்கொண்டால் நமத்துப் போகாமல் இருக்கும்..

     உருண்டை பிடிக்கும் பொழுது, கையில் சூடு படாமலிருக்க அரிசி மாவு அல்லது நெய் அல்லது எண்ணெய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments