Breaking News

தேர்தலை ஒத்தி வைக்க முடியாது...! உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

         பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றது. இந்நிலையில் கொரொனொ தொற்று மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் தேர்தலை தற்போது நடத்துவதற்கான சூழல் இல்லை எனவும் ஆதலால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
   மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் ஆணையம் தற்போதைய சூழலினை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றும்,  எந்த காரணத்திற்காகவும் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டவை, அதில் நீதிமன்றம் தலையிடுவது முறையாகாது ஆதலால் தேர்தலை தள்ளி வைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments