Breaking News

காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமார் காலமானார்...!

      கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி யும், தமிழக காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், வசந்த் அண்ட் கோ நிறுவன உரிமையாளருமான எச் வசந்தகுமார்(70), கொரொனொ தொற்று காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
            கடந்த சில நாட்களுக்கு முன்பாக எச்.வசந்தகுமார் கொரொனொ தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரு தினங்களுக்கு முன்பாகவே மருத்துவமனை நிர்வாகம், வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் நேற்று மாலையில் எச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
         இவரது மறைவிற்கு குடியரசு தலைவர், முதலமைச்சர், ரஜினிகாந்த் உட்பட பல அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், பல நிறுவன தலைவர்களும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று சென்னை தியாகராய நகரில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, அதன் பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

        எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த அகத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர். தனது கடின உழைப்பினால் வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

         அதன் பின்னர் 2006 மற்றும் 2016 நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2019 இல் கன்னியாகுமரி தொகுதியில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி கண்டார். இவ்வாறாக இரண்டு முறை எம்.எல்.ஏ வாகவும் ஒரு முறை எம்.பி. ஆகவும் பதவி வகித்துள்ளார்.
      மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இவரது உடன் பிறந்த சகோதரர் ஆவார். தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இவர் சித்தப்பா ஆவார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.


Post a Comment

2 Comments

  1. ஆளுக்கு ஒரு நீதி நம் நாட்டில். பதவியில் இருப்பவர் நோயில் மரணித்தாலும் அவரை கன்னியாகுமரி வரை எடுத்துச் செல்ல அரசாங்கம் அனுமதிக்கும். சாதாரண குடிமகன் இறந்தால் சுடுகாடோ பள்ளி வாசலுக்கு நேராக முழு கவசத்துடன் யாரும் பார்க்க முடியாமல் செய்வார்கள். என்று மாறும் இந்த சுதந்திர தாகம். என்றுமடியும் உங்கள் அடிமையின் மோகம்

    ReplyDelete
  2. ஆளுக்கு ஒரு நீதி நம் நாட்டில். பதவியில் இருப்பவர் நோயில் மரணித்தாலும் அவரை கன்னியாகுமரி வரை எடுத்துச் செல்ல அரசாங்கம் அனுமதிக்கும். சாதாரண குடிமகன் இறந்தால் சுடுகாடோ பள்ளி வாசலுக்கு நேராக முழு கவசத்துடன் யாரும் பார்க்க முடியாமல் செய்வார்கள். என்று மாறும் இந்த சுதந்திர தாகம். என்றுமடியும் உங்கள் அடிமையின் மோகம்

    ReplyDelete