Breaking News

பாதங்களில் வெடிப்பா...! இனி கவலை வேண்டாம்... எளிமையான 5 வழிமுறைகள்.

      உடலை நன்றாக பராமரிக்கும் சிலர் பாதங்களை சரியாக கவனிப்பதில்லை . பாதங்களில் தோல் உரிதல், சிறிய வெடிப்புகள் போன்ற சிறிய பிரச்சினைகள் கவனிக்காமல் நாளடைவில் பெரிய வெடிப்புகளாக மாறி பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
        பாத வெடிப்புகளை குணப்படுத்த பல்வேறு ஆங்கில மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்தாலும் கூட, பாத வெடிப்புகளை  எளிமையாக குணமாக்க பல இயற்கை வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

எளிமையான ஐந்து வழிமுறைகள்:

#மருதாணியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வெடிப்புள்ள இடங்களில் பூசி சிறிது நேரத்திற்கு பின்னர் கால்களை கழுவவும். 

#மஞ்சளை சுத்தமான நல்லெண்ணெயில் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் போடவும்.
#மிதமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு கலந்து வெடிப்புள்ள பாதங்களை ஐந்து நிமிடத்திற்கு ஊறவைக்கவும்.

#பப்பாளி பழத்தினை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம்.

#வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவுங்கள்.


Post a Comment

0 Comments