Breaking News

பெற்றோர்களிடம் முட்டைகளை வழங்குங்கள்:- அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

        உலகம் முழுவதும் பரவ தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
         தமிழகத்தில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கும், பள்ளிகளில்
சத்துணவு திட்ட மாணவர்களுக்கும் முட்டை வழங்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர் சுதா பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

        இந்த வழக்கின் முதல் அமர்வு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி உரிய நேரத்தில் முட்டைகளும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் உத்தரவிட்டனர்.

       இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக இடைவெளியை காரணம் காட்டி முட்டை வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

     இதைக்கேட்ட நீதிபதிகள் கல்விக்கண் கொடுத்த காமராஜரின் வார்த்தைகளான "முட்டை வழங்க முடியாது என்பதற்கு காரணங்களை சொல்லாதீர்கள் அவர்களுக்கு எப்படி முட்டை வழங்க முடியும்" என்பதை முடிவெடுங்கள் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது 
     சமூக இடைவெளியை காரணம் காட்டும் பொழுது ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என்பதை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது
   கடைசியாக மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மாணவர்களுக்கான முட்டைகளை வழங்கவேண்டும் என்றும் மாணவிகளுக்கான நேப்கின் வழங்குவது குறித்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Post a Comment

0 Comments