Breaking News

இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் தான் இருக்கும் ...! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

          கொரொனொ தொற்று காரணமாக நாடு முழுவதும் அமலில் இருந்த இ-பாஸ் முறை, பல மாநிலங்களில் தளர்த்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
     இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, "இ-பாஸ் முறை இருந்தால் தான், யார் யார்.. எங்கெங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்.." என்று தெரிவித்தார்.

       மேலும் தமிழக அரசு நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது என்றும், கொரொனொ தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments