Breaking News

இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுமா..? தலைமைச் செயலர் சண்முகம்-மாவட்ட ஆட்சியர்கள் உடன் தீவிர ஆலோசனை...

    கொரொனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இ-பாஸ் முறை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் இ-பாஸ் முறையில் சிரமப்பட்டு வருவதாகவும், அதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வந்த வண்ணம் இருக்கின்றது.

      இந்நிலையில் மத்திய அரசு இ-பாஸ் முறையை தேவைப்பட்டால் ரத்து செய்து கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் இ-பாஸ் தொடருமா..? என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்து வருகின்றது. 
      இந்நிலையில் தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் ஒன்று காணொளி மூலமாக நடக்க இருக்கின்றது . இந்த கூட்டத்தில் கொரொனொ தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தலாமா..? என்பது பற்றிய விவாதங்கள் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments