Breaking News

மழைக்காக கொரொனா கவச உடையை திருடிய குடிமகன் :-கொரொனாவில் சிக்கிய பரிதாபம்....!

       மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மழைக்காக ரெயின்கோட் என நினைத்து கொரொனா கவச உடையை திருடி சென்று கொரோனாவில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     நாக்பூரை சார்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் மகாராஷ்டிராவில் பணிபுரிந்து வருகிறார். அவர் சில நாட்களுக்கு முன்பாக போதையால் கீழே விழுந்த காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மாயோ ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார்.

       அப்பொழுது மதுபோதையில் இருந்த அந்நபர் அங்கு மருத்துவர்கள் அணியும் கொரோனா கவச உடையை கண்டு மழைக்கு உதவும் ரெயின்கோட் என நினைத்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கடந்த சில நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார்.

          கவச உடையை பற்றி விசாரித்த நபர்களிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாக முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளார். இதுபற்றி சந்தேகப்பட்ட அந்த நபர்கள் அப்பகுதி சுகாதார ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

      அவர்கள் வந்து அந்தக்கவச உடையை தீயிட்டு எரித்தனர் மேலும் சந்தேகத்தின் பேரில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இப்பொழுது மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments