Breaking News

காதலி பேச மறுத்ததால் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்.....

     சென்னையில் உள்ள ஆலப்பாக்கத்தில் ஒரு தனியார் கல்லூரியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருபவர் நேபாள நாட்டை சேர்ந்த டில் பகதூர் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த கல்லூரியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் டில் பகதூர் தனது சொந்த ஊரில் ஒரு பெண்ணுடன் காதலில் சிக்கியுள்ளார். அவருடன் தினமும் மணிக்கணக்கில் பேசியுள்ளார்.  
      சம்பவத்தன்று திடீரென்று அவரது காதலி பேச மறுத்து உள்ளார். இதில் விரக்தியடைந்த டில் பகதூர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments