Breaking News

சென்னையில் 23வது அடுக்குமாடி தளத்தில் வெளிப்புறமாக நடந்த சிறுமி...! வைரலாகும் வீடியோ...

         "இளங்கன்று பயமறியாது" என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப ஆங்காங்கே பல விசித்திரமான சம்பவங்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். அந்த வகையில் சென்னை நாவலூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 23-வது தளத்தில் 15 வயது சிறுமி ஒருத்தி விளிம்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


        சம்பவத்தன்று அந்த சிறுமிக்கும் அவளது சகோதரருக்கும் ஒரு பந்தயம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பந்தயத்தின் படி, யார் தளத்தின் வெளிப்புற விளிம்பில் அச்சமில்லாமல் நடப்பார்களோ, அவர்களே வெற்றியாளர் என்பதே . இதைத்தொடர்ந்து அச்சிறுமி துணிச்சலுடன் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கிறார்.


        இதை எதிர் குடியிருப்பில் குடியிருந்தவர்கள், தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்நேரத்தில் இச்சம்பவத்திற்கு அப்பகுதி குடியிருப்பு சங்கம் கடுமையான எதிர்ப்பை முன்வைத்திருக்கிறது.


Post a Comment

0 Comments