Breaking News

கோழிக்கோடு விமான விபத்து கனமழை காரணமாக நடந்துள்ளது...! கேரள அரசு தகவல்...

         IX 1344 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்விமானம் துபாயில் இருந்து கேரளாவிற்கு 191 பயணிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வந்துகொண்டிருந்தது.
        சுமார் 7 மணிக்கு தரை இறங்க தயாரான விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்று உடைந்து சிதறியது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் மரணித்ததாக தெரிகிறது.

       இதுபற்றி தகவல் வெளியிட்ட கேரள அரசு, விமானம் தரையிறங்கும் போது கனமழை பெய்து கொண்டிருந்தது எனவும் அதனால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

     விமானத்தில் 174 பயணிகளும், பத்து குழந்தைகளும், இரண்டு பைலட்டுகளும், 5 விமான குழுவினரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments