Breaking News

நீட் தேர்வினை தள்ளிவைக்க வேண்டும்..! நடிகர் சோனு சூட் வேண்டுகோள்..

      இந்தியாவில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வும், செப்டம்பர் ஒன்று முதல் ஆறாம் தேதி வரை ஜேஇஇ தேர்வுகளும் நடப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மாணவர்கள் போடப்பட்டிருந்த வழக்குகள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.
      கொரொனொ தொற்று பரவல், பொது முடக்கம், போக்குவரத்து இல்லாமை, சில மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற பல காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீட் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும் என்று பல அரசியல் தலைவர்களும் நடிகர்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
    இந்நிலையில் அருந்ததி பட வில்லன், பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரொனொ தொற்று பரவலில் நீட் தேர்வு நடைபெறும் பட்சத்தில், மாணவர்களின் உயிருக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாததால் நீட் தேர்வினை மத்தியஅரசு தள்ளிவைக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் பொது முடக்ககாலத்தில் பல மக்களுக்கு பலவிதமான சமூக சேவைகளை செய்து மக்களிடத்தில் நல்ல பெயர் பெற்று வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments