Breaking News

கைலாசாவில் உணவகம் அமைக்க அனுமதி கேட்டிருந்த மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது பரபரப்பு புகார்..!

     இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பல வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் சுவாமி நித்யானந்தா. அவர் ஒரு தீவு ஒன்றினை வாங்கி அந்த தீவுக்கு கைலாசா நாடு என்று பெயரிட்டு அனைவரையும் திடுக்கிடச் செய்தார். மேலும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டிற்கு என்று பிரத்தியேக நாணயங்களை வெளியிடுவதாக அறிவித்து அதன்படி பல நாணயங்களை வெளியிட்டு இருந்தார்.
      இந்நிலையில் மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் என்பவர் கைலாசாவில் ஹோட்டல் அமைக்க தான் விரும்புவதாகவும் சுவாமி நித்தியானந்தா அதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

     இந்நிலையில் மதுரையை சார்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், நித்யானந்தாவை நல்லவர் போல் ஜோடிக்கும் முயற்சியில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் ஈடுபடுவதாகவும், தேடப்படும் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது செயல் இருப்பதாகவும் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் மீது தொடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Post a Comment

0 Comments