Breaking News

தேர்தல்களை நடத்த புதிய அணுகுமுறைகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் …. !

   பீகார், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றது. தற்போது கொரொனொ தொற்று பரவல் நீடிக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பல புதிய அணுகுமுறைகள் உடன் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. 

நடைமுறைப்படுத்த இருக்கும் சில அணுகுமுறைகள்:

#வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க், கையுறை அணிந்திருக்க வேண்டும்.


#வாக்காளர்கள், வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே வாக்கு செலுத்தி அனுமதி அளிக்கப்படும்.


#காய்ச்சல் இருப்பது உறுதியானால் நோயாளிகளுக்கு இறுதியாக வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.


#1500 பேருக்கு, ஒரு வாக்காளர் மையம் என்று இருந்த நிலை ஆயிரம் பேருக்கு ஒரு வாக்காளர் மையம் என்று குறைக்கப்படும்.

#நன்கு விரிவான அகலமான அறைகளை வாக்காளர் மையமாக பயன்படுத்தப்படும்.


#வாக்காளர் மையத்தின் முன்பாக கிருமிநாசினி, சோப்பு, தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும்.


#தேர்தல் பணியாளர்கள் அனைவரும் மாஸ்க், கையுறை அணிந்திருக்க வேண்டும்.

#வேட்புமனு தாக்கல், டெபாசிட் செலுத்துதல் போன்றவை ஆன்லைன் மூலம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


#வாக்கு சேகரிக்க செல்பவர்கள் ஐந்து பேராக மட்டுமே செல்லலாம்.


#பொதுக் கூட்டம், மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பெயரில் நடத்திக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments