Breaking News

முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை ..!பெங்களூரில் 3 பேர் உயிரிழப்பு...

    பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏ வின் உறவினர் ஒருவர் பதிவிட்ட முகநூல் பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக அமைந்தது 

     இதைத்தொடர்ந்து டிஜி ஹாலி, கேஸி ஹாலி பகுதியில் பொதுமக்கள் ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு அங்கு நின்ற வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    காவலர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தியவர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தீ வைத்தவர்கள் என சுமார் 110 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    இதைத்தொடர்ந்து எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை,தினேஷ் குண்டுரா ஆகியோர்கள் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று வீடியோக்கள் மூலம் தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ் வீடு மற்றும் பைர் சாண்ட்ரா காவல் நிலையம் அதிகமாக தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments