Breaking News

ஆப்கானிஸ்தானில் பெரும் வெள்ளப்பெருக்கு...! 72 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கினால், கிட்டத்தட்ட எட்டு மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
         ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் வெள்ளம் இழுத்துச் சென்றது.

     வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேசிய பேரிடர் குழு மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணலில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக போராடி வருகின்றனர். இதுவரை 72 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Post a Comment

0 Comments