Breaking News

டிராக்டர் ஏற்றி பெண் படுகொலை..!- கடன் கொடுத்தவர் வெறிச்செயல்

       ஆந்திர மாநிலத்தில் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்காததால் அந்த பெண்ணை கடன் கொடுத்தவர் டிராக்டரால் டிராக்டரால் ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
      ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த மாத்துரூபாய் என்ற பெண், அதே கிராமத்தைச் சார்ந்த சீனிவாச ரெட்டி என்பவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் கொடுத்த தேதிக்குள் பணத்தை திருப்பிக் கொடுத்து நிலத்தை மீட்க முடியாததால் அந்தப் பெண் சீனிவாச ரெட்டி இடம் தனது நிலத்தை நீங்களே வைத்துக்கொண்டு மீதி பணத்தை என்னிடம் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.
       ஆனால் இதற்கு ஒத்துவராத சீனிவாச ரெட்டி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மாத்துரூபாய் மீது தனது டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து குண்டூர் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Post a Comment

0 Comments