Breaking News

அசத்த வருகிறது நகரும் ரேஷன் கடைகள்...! தயார் நிலையில் தமிழக அரசு...

             தமிழகமெங்கும்  "அம்மா நகரும் ரேஷன் கடைகள்"  திறப்பதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது அதற்கான வேலைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.          தமிழக சட்டமன்றத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது தமிழகமெங்கும் மக்கள், எளிதாக அத்தியாவசிய பொருள்களை வாங்கி பயன்பெறும் வண்ணம் குடியிருப்புக்கு அருகிலேயே செல்லக்கூடிய நகரும் ரேஷன் கடைகள் திறக்க திட்டம் தீட்டப்பட்டு அதன் முடிவில் 3501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் சுமார் 9.66 கோடி செலவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


        இதன்படி தமிழக அரசு நகரம் ரேஷன் கடைகள் செயல்படும் ஒரு சில நிபந்தனைகளோடு அரசாணை வெளியிட்டுள்ளது. #முழு விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்

#வினியோகம் செய்ய பொதுமக்களுக்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும்

#தகவல் பலகை மூலம் தேவையான விபரங்களை வழங்க வேண்டும்

#மூடிய நிலை வாகனங்கள் பயன்படுத்திவிட வேண்டும்

#தராசுகள்,POS எந்திரம் ஆகியவற்றை சரியான பராமரிப்பில் வாகனத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.

#வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொருட்கள் சேதமின்றி செல்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

#திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமான எண்ணிக்கையில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட இருக்கிறது.

Post a Comment

0 Comments