Breaking News

இனி மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு 1.5 லட்சம் வரை அரசு மானியம் வழங்க முடிவு..!

      இந்தியாவில் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்தி, அந்நிய செலவாணியை மிச்சப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

      அந்தவகையில் டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு , புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு புதிய மின்சார வாகன கொள்கையின் கீழ் அதிகபட்சமாக 1.5 இலட்சம் வரை மானியம் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது.

      இதன்படி இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷா, இரிக்ஷா, சிறிய சரக்கு ரக மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு 30 ஆயிரம் ரூபாயும், நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவோருக்கு 1.5 லட்சமும் மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

         மேலும் இதற்கான பதிவு மற்றும் சாலை வரி ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மின்சார வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments