Breaking News

அவசர சிகிச்சை பிரிவில் பிரணாப்முகர்ஜி...!

         முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் கழிவறையில் வழுக்கி விழுந்துதலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Former President Pranab Mukherjee tests +ve for COVID-19 | Pranab Mukherjee  covid positive| Pranab Mukherjee covid
     அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரொனொ தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பகுதியில் தன்னுடன் ஒருவாரம் தங்கி இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

     அதைத்தொடர்ந்து நேற்று பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர். இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் நேற்று நேரில் சென்று பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் அவரின் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

      84 வயதான பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments